மேல் மாகாணத்தின் பிரபல கழகங்கள் பங்கேற்கும் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றி கிண்ணம்
மேல் மாகாணத்தில் இருக்கக்கூடிய பிரபல 16 கழகங்கள் பங்குபற்றும் 19வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடிய மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒக்டோபர் 19 ஆம் திகதி காலை 08.00 மணிக்கு பொரள்லையில் அமைந்துள்ள, குணசிங்க புர, கெம்பல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் இத் தொடர் நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்ந்தும் போட்டிகள் நடைபெற்று நவம்பர் 30ஆம் திகதி இறுதி சுற்று போட்டி சுகததாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.