ஓமான் தூதுவருடன் பிரதியமைச்சர் முனீர் சந்திப்பு
சமய கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதுவர் அஹமட் அலி செய்ட் அல் ரஷீட் அவர்களை தூதரக காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை ஓமான் நாடுகளின் நீண்ட கால உறவை மேலும் மேன்படுத்துவது, இலங்கையில் புதிய முதலீடுகளை ஆரம்பிப்பது, ஓமான் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் சிறந்த சுற்றுலாத்துறை தளமாக இலங்கையை அதி முகம் படுத்துவது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன.
(இஸ்மதுல் றஹுமான்)