யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது- 2025
யாழ் முஸ்லிம் சமூக ஊடகம் நிர்வாகி கலாபூஷணம் பரீட் இக்பால் வழங்கும் யாழ் முஸ்லிம் சமூக ஜோதி விருது 2025 க்கு அறுவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருது வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணையாளராக யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ்.எம்.சரபுல் அனாம் பெயரிடப்பட்டுள்ளார்.
அதற்கமைய முன்னாள் ஒஸ்மானியா கல்லூரி அதிபரும் சமூகப்பற்றாளருமான எம்.ஏ.ஆர்.ஏ.றஹீம், யாழ் முஸ்லிம் சமுதாயத்தில் முதலாவது பெண் சட்டத்தரணி றயீஷா கான், யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் திறமை பதித்த கிரிக்கெட் வீரர் நஸீர் சுல்தான், யாழ் முஸ்லிம் சமுதாயத்தில் முன்னாள் திறமை பதித்த உதைபந்தாட்ட வீரர்கள் மாமுனா மரைக்கார் ஜசூர், றாவுத்தர் முஸாதீக், எஸ்.ஆர்.றமீஸ் ஆகிய அறுவரின் பெயர் இவ்விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
