கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் “டெஸ்ட் டுவென்டி”
கிரிக்கெட் விளையாட்டின் புதிதாகவும் நான்காவது வடிவமாகவும் இருக்கும் “டெஸ்ட் டுவென்டி” போட்டி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
13 முதல் 19 வயதுக்குட்பட்ட இளைய வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த போட்டி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 9 விதிகளை கொண்ட இந்த போட்டி, ஒவ்வொரு அணியும் இருமுறை துடுப்பெடுத்தாடும் வகையில் 80 ஓவர்கள் கொண்டதாக நடைபெறும்.
டெஸ்ட் போட்டியைப் போலவே, இன்னிங்ஸ்களுக்கிடையிலான ஓட்டங்கள் தொடராக கணிக்கப்படும். ஆனால், ஒரு நாளுக்குள் போட்டி முடிவடையும் வகையில் இத்தகைய வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.