கல்முனை நூலகத்தில் இடம்பெற்ற கதை சொல்லும் நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கதை சொல்லும் சிறப்பு நிகழ்வு புதன்கிழமை (15) நூலகர் ஹரீஷா சமீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சனசமூக உத்தியோகத்தர் என்.எம். ஸாஹிர் பிரதம அதிதியாகவும் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் இந்து சமய ஆசிரிய ஆலோசகர் எம். லக்குணம் சிறப்பு அதிதியாகவும் ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி. சிவப்பிரகாசம், ஓய்வுபெற்ற அதிபர் திருமதி பேரின்பராஜா ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலைஞர் ஜீனாராஜ், கலைஞர் துஷ்யந்தன் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது நூலகப் பயன்பாடு மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களினால் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன.
நிகழ்வில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டப்பட்டனர்.
கல்முனை மாநகர சபையின் வருமான பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வுக்கு மர்ஹூம் ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ. காதர் ஞாபகார்த்த குழுமம் அனுசரணை வழங்கியிருந்தது.




(அஸ்லம் எஸ்.மெளலானா)