மு.கா, அ.இ. ம.கா, தே.கா மீது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் குற்றச்சாட்டு
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபையில் இருந்து கொண்டு மக்களை கொள்ளையடிக்க துணை போனார்களே தவிர கல்முனை வாசிகசாலையை அபிவிருத்தி செய்ய முயற்சி எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இத்தனைக்கும் அ.இ. மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ. முஸ்லிம் காங்குரஸ் தலைவர்கள் பல காலமாக கெபினட் அமைச்சர்களாக இருந்தும் கல்முனையை கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை.
இவர்கள் தேர்தல் நெருங்கும் போது, திருவிழாவுக்கு வரும் முண்டாசு கட்டிய மிட்டாசி யாவாரி போல் கல்முனைக்கு வந்து பாட்டையும் பணத்தையும் போட்டு மக்களின் வாக்குகளை அள்ளிச்செல்வதில்தான் கவனமாக இருந்தார்களே தவிர ஒரு உருப்படியான அபிவிருத்தியையும் இந்தக்கட்சிகள் கல்முனை தொகுதிக்கு செய்யவில்லை.
ஆகவே கிழக்கு மக்களும் கல்முனை மக்களும் இந்த ஏமாற்று கட்சிகளுக்கு மேலும்பவர்கள் மேலும் ஏமாந்து இளிச்சவாய் மக்களாக இராமல் அரசியலில் விழிப்படைய வேண்டும்.
கடந்த இருபது வருடங்களுள், மக்கள் வாக்குகளை பெற்று உள்ளூராட்சி சபைகள், மாகாண சபை, பாரளுமன்றம் என இருந்தும் மக்களை ஒதுக்கிய கட்சிகளை மக்கள் ஒன்றுபட்டு ஒதுக்கி புதிய கட்சிகளை பலப்படுத்த முன்வராத வரை தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது கனவாகி போய் விடும்.
முஸ்னத் முபாறக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்