உள்நாடு

ஆலங்குடாவில் இடம்பெற்ற மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு

கற்பிட்டி ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியில்
கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (12) ஆலங்குடா பெரியபள்ளி மைதானத்தில் ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ரஸ்மில்கான் (ரஷீதி) தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்பிட்டி கிளையின் தலைவரும், கற்பிட்டி ரஹ்மானியா அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் முபாஸில் (உஸமானி) , சிறப்பு அதிதிகளாக புளிச்சாகுளம் ஷரபிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் நஸீர் (ஷரபி), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அப்துர் ரஸீத் (காஸிமி), கற்பிட்டி மஐ்லிஸுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிப்கான் (ரஹ்மானி),செயலாளர் சிபான் (ஹாஸிமி), அதிதிகளாக ஆலங்குடா பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல் ஹாஜ் ராஸிக் மற்றும் திகழி பாடசாலை அதிபர் மின்ஸார், திகழி பாடசாலை ஆசிரியர் சுக்ரி ,நுரைச்சோலை பாடசாலை ஆசிரியர் தாரிக், கெய்யாவாடி பாடசாலை ஆசிரியர் அல்தாப் மற்றும் ஆலங்குடா உலமாக்கல் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு போட்டியில் கலந்து கொண்ட 130 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஐந்து இடங்களை பெற்ற 50 மாணவர்களுக்கு நினைவுச் சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அல்குர்ஆன் மத்ரஸாவின் முஅல்லிம்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டது.

குறித்த இந்நிகழ்வை ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான அஷ்ஷெய்க் இல்ஹாம் (ஐன்னதி) தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *