பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திய மெளன ஓசை நூல் வெளியீடு விழா
ருஸ்தா லுக்மான் எழுதிய நூல் மௌன ஓசை கவிதை நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பான முறையில் பெற்றோர்கள் முன்னிலையில் 11/10 2025 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கஹடோவிட முஸ்லிம் ஸ்டடி சேர்கிளில் வெளியீடு செய்யப்பட்டது.
அவ்வேளை பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு ரயீஸா ரஸ்ஸாக் குமாரி முல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உப அதிபர் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக ஓய்வு நிலை தேர்தல் ஆணையாளர் நாயகம் M.M.முஹம்மட் அவர்கள் கலந்து சிறப்பிக்க முதல் பிரதியினை பிரபல வர்த்தக பிரமுகர் சமூக சேவையாளர் பஸீர் அலி அவர்கள் பெற்று கவிதாயினியை ஊக்குவித்தார்.
கௌரவ அதிதியாக கலந்து கொண்ட வளவாளர் U.K ரமீஸ் அவர்கள் விஷேட அதிதி உரையினை நிகழ்த்தியதோடு மௌன ஓசையின் வரிகளை வரி வரியாக அலசி ஆராய்ந்து ஆழகாக வார்த்தெடுத்தார்.
அச்சமயம் சிங்கள மொழி மூலமான ஒரு சிறப்புப் பேச்சொன்றையும் சமூக சேவையாளர் கியாஸ் ஹாஜியார் அவர்கள் ஆற்றினார்கள்.
கலாபூஷணம் M.A.M . நிலாம் மீடியா போரம் தலைவர் நூல் விமர்சனம் செய்தார்.
கவிஞர் எழுத்தாளர் நாச்சியார் தீவு பர்வீன் அவர்களின் நூல் நயவுரையும் அரங்கத்தை சிறப்பாக்கியது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய ஹிமா பெண்கள் நலன்புரிச்சங்கத்தின் தலைவி நஸ்மியா நஸ்மி நலன் புரிச்சங்கத்தின் சார்பாக கவிஞர் ருஸ்தா லுக்மானை பொன்னாடை போர்தி கௌரவித்து அரங்கத்தை அழகுறச் செய்தார்.
அனைத்து உரைநிகழ்வுகளும் பார்வையாளர்களை சலிப்படையச் செய்யாது இனிவரும் பெண் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகவே அமைந்திருந்து.
இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக A.S.முஹம்மத் முன்னாள் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் தயாரிப்பாளர் இலங்கை ஔிபரப்புக்கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை இஸ்பஹான் சாப்தீன் மற்றும் மனாஸ் மக்கீன் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
எழுத்துக்களை கருவாக்கி பல வலிகளையும் அதன் ரணங்களையும் சுமந்து பிரசவமான அவரது நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர்கள் ஊடகவியளாளர்களின் ஒத்துழைப்பு மட்டுமன்றி ஊர்மக்கள் மற்றும் நண்பர்களின் பெரும் ஒத்துழைப்பால் அரங்கம நிறைந்திருந்தது என்றால் மிகையாகாது.
இவ்விழாவை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்வதோடு எனது சகோதரி ருஸ்தா லுக்மானின் எழுத்துக்கள் மென் மேலும் மெருகூட்டப்பட்டு சிறப்பாக எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன்.














எழுத்தாளர்
உளவள ஆலோசகர்
லுதுபியா லுக்மான்