ஆங்கிலக் கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று சம்பியன் பட்டம் வென்றார் கல்பிட்டியின் சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம்
The American Federation of festivals – Srilanka வினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற 5 வயதிற்குற்பட்டவர்களுக்கான ஆங்கில கவிதைப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றார் கல்பிட்டியைச் சேர்ந்த சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கன் பெடரேசன் ஒப் பெஸ்டிவல்ஸ் நிறுவனத்தின் இலங்கைக் கிளை ஏற்பாடு செய்திருந்த ஆங்கில இலக்கிய போட்டி நிகழ்ச்சிகளில் 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஆங்கிலக் கவிதைப் போட்டியில் சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம் பங்கேற்று மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியிலான போட்டியில் மீண்டும் முதலிடத்தை தன் வசப்படுத்திக் கொண்ட சப்னி மொஹம்மட் அலீஸா மர்யம் 2025 ஆம் ஆண்டின் 5 வயதிற்குட்படோருக்கான ஆங்கிலக் கவிதைப் போட்டியின் சம்பியன் பட்டத்தினை தனதாக்கினார். மேலும் இவ் வெற்றிக்காக பெறுமதிமிக்க சான்றிதழும், சம்பியன் கிண்ணமும் அவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் சட்டத்தரணி சப்ரி மொஹம்மட் சப்னி மொஹம்மடின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.


(அரபாத் பஹர்தீன்)