உலகம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தொடர் வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். சபாநாயகர் அப்பாவு தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், மறைந்த 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயர சம்பவம், மறைந்த முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் சிபுசோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மேலும் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பியூலா வெங்கடேசன் ஆகியோருக்கு சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 15 ஆம் திகதி (புதன்கிழமை) 20252026ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். தொடர்ந்து மறுநாள் விவாதம் நடைபெறும். 17 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலுரை மற்றும் வாகெடுப்பு நடைபெறும். 15, 16, 17 ஆம் திகதி ஆகிய மூன்று நாட்களும், கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் இடம்பெறும்.

பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து மற்ற கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார். பின்னர், அப்பாவு கூறுகையில், “அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவைக் கூட்டம் அக்.14 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும்.” என அறிவித்தார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *