உள்நாடு

எந்நேரமும் மாகாண ஆளுநர்களில் மாற்றங்கள் வரலாம்

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும் தமது மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின் செயற்பாடுகள், பெறுபேறுகள், நடவடிக்கை முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மதிப்பீடுகளைத் தயாரித்து வருகின்றது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அவற்றின் அடிப்படையில் ஜனாதிபதியின் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழர்களின் ஈடுபாடு உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதி செயலகம் ஓரளவு திருப்தி கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாமல், நிர்வாக நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் அறிய முடிகிறது.

என்றாலும், செயல்பாடுகளில் திருப்தி இல்லாத சில மாகாண ஆளுநர்கள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *