உள்நாடு

வெற்றிகரமாக நடைபெற்ற கஹட்டோவிட்ட ருஸ்தா லுக் மானின் “மௌன ஓசை ” கவிதை நூல் வெளியீட்டு விழா..!

கஹட்டோவிட்டாவின் இலக்கியத்துறையில் முக்கிய நிகழ்வான “மௌன ஓசை ” கவிதை புத்தக வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 11/10/2024
கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வட்ட கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3மணியளலில் ஆரம்பமானது.

மூதூர் ஜேஎம்ஐ பப்லிகேஷனினால் வெளியிடப்படுகின்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம் எம் முஹம்மத் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அஷ். யூ.கே. ரமீஸ் அவர்களின் விஷேட உரை நிகழ்த்தினார்.
நூல் விமர்சனத்தினை தினகரன் ஆசிரியர் பீடத்தின் முன்னாள் ஆலோசகரும் கம்பஹா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. எம் நிலாம் நூல் விமர்சனத்தினையும் ஊடகவியலாளர் நாச்சியாதீவு பர்வீன் நூல் நயவுரையையும் நிகழ்த்தினார்கள்.

இதனையடுத்து கஹட்டோவிட்டாவின் இளம் எழுத்தாளர் ருஸ்தா லுக்மானின் உரை இடம்பெற்ற தோடு அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இறுதியில் முதற் பிரதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது நிகழ்வுக்கு வருகை தந்த முக்கிய அதிதிகளுக்கும் விசேட அதிதிகளுக்கும் ,கௌரவ அதிதிகளுக்கும் என பலருக்கும் முதற் பிரதி வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

(எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *