பேருவளையில் விஷேட சந்திப்பு..!
களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் தற்போதைய மாவட்ட சம்மேளனத்தின் இளம் நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (12) பேருவளையில் இடம்பெற்றது.
களுத்தறை மாவட்டத்தின் அரசியல், கல்வி, உயர் கல்வி, உட்கட்டமைப்பு வசதிகள், ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் உள்ளிட்ட சமகால விவகாரங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், முஸ்லிம் லீக்கின் மூத்த, இளம் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



