புத்தளம் மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச செயலமர்வு..!
பெண்களை மையமாகக் கொண்ட ஊடகம், தலைமைத்துவம், மணப்பெண் அலங்காரம், மருதாணிக் கலை, கேக் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அடங்கியதான ஒரு நாள் இலவச செயலமர்வு, அண்மையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
எம்.ஐ. லேர்னிங் அகடமி ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், மாணவர்களுக்கான ஊடக தலைமைத்துவ செயலமர்வை, ஆர்.ஜே. மீடியா பணிப்பாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான அறிவிப்பாளர் ஏ.எம். இன்சாப் நெறிப்படுத்தினார். மணப் பெண் அலங்காரம், மருதாணிக் கலை, கேக் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை, எம்.ஐ. லேர்னிங் அகடமியின் பணிப்பாளர் பாத்திமா இஜாஸா மேற்கொண்டார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். புத்தளம், வவுனியா போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்டு, அதிக பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )