‘சாகித்திய ரத்னா’ அல் அஸூமத்துக்கு கௌரவம்..!
வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு கடந்த பௌர்ணமி தினம் இடம்பெற்றபோது 2025 ஆம் ஆண்டிற்கான ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்ற கவிமாமணி அல் அஸூமத்தை பாராட்டு விருது வழங்கி வகவம் கௌரவித்தது. நிகழ்வின் பிரதம அதிதியாகவும் கவிஞராகவும் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வகவம் சார்பாக அல் அஸூமத்துக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார். படத்தில் வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் ஈழகணேஷ், தேசிய அமைப்பாளர் எஸ். தனபாலன், நிர்வாகக் குழு உறுப்பினர் தமிழ்த் தென்றல் அலி அக்பர், கவியரங்கை தலைமையேற்று நடத்திய கவிஞர் லைலா அக்ஷியா ஆகியோர் காணப்படுகின்றனர்.