சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் அமைப்பின் பேருவளை அணி ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம்..!
சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் (International Human Rights Global Mission) அமைப்பின் பேருவளை அணி ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் செயற்திட்டம், நேற்று (11) பேருவளை அல்-பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய வளாகத்தில், வெற்றிகரமாக நடைபெற்றது.
பேருவளை அணிக்கான தலைவர் திருமதி. பஸ்லா பகீர் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மைச் சிரேஷ்டர் பேராசிரியர் டாக்டர். மதுகிருஷ்ணன், மனித உரிமைகள் இலங்கை பிராந்திய இயக்குநர் டாக்டர். அப்துல் ரசாக், அமைப்பின் சட்ட ஆலோசகர் டி.வி. ஷங்கர், அமைப்பின் தலைமை நிர்வாகி H.E. டாக்டர் எம்.ஏ.சி. மக்சூம் JP (WI), இலங்கை பிராந்தியத் தலைவர் ஏ.ஆர்.என். அமீர் கான் மற்றும் அமைப்பின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான துணைத் தலைவர் திருமதி. எப். ஷிரீன் ஆகியோரும் கலந்துகொண்டு, நிகழ்வை சர்வதேச தரத்திற்கு கொண்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிகழ்வில் பேருவளைப் பிரதேசத்தின் பலதரப்பட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்றதோடு, பேருவளை மற்றும் பிற பிராந்தியங்களில் இருந்து பல விசேட வைத்தியர்களும் மக்களுக்கான இலவச வைத்திய சேவையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(பேருவளை ஸாபித் துல்பிகார்)