தமிழ் பேச்சுப் போட்டியில் யூஸுப் அம்மார் இரண்டாம் இடம்..!
பாணந்துறை – லைசியம் சர்வதேச பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் யூஸுப் அம்மார் பஸால், சர்வதேச பாடசாலை ரீதியில் நடைபெற்ற “லைசியம் தமிழ் பேச்சுப் போட்டி – 2025” இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
பாடசாலை தலைமையாசிரியை இஷானி மென்டிஸ் வழி காட்டலில், பொறுப்பாசிரியை எஸ். பிரவீனாவின் சிறந்த நெறிப்படுத்தலின் கீழ் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட மாணவன் யூஸுப் அம்மார், பாடசாலையில் ஆங்கில மொழி மூலம் கல்வியைப் பயின்று வந்தாலும், சர்வதேச பாடசாலை மட்டத்தில் இம்மாணவனது முதல் தமிழ் பேச்சுப் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
யூஸுப் அம்மார், பாணந்துறை கொறகானயைச் சேர்ந்த பஸால் ஷாபி தீன் – ருக் ஷானா யஹியா தம்பதியினரின் புதல்வராவார்.
( ஐ. ஏ. காதிர் கான் )