சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத்தின் 46வது மீலாதுன் நபி போட்டி, பரிசளிப்பு விழா
சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் இயங்கும் குர் ஆன் மத்ரஸாக்களுடையில் வருடாந்தம் நடாத்தப்படும் மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் சனிக் கிழமை இன்று 11 ஆம் திகதி அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.
30 வகையான சன்மார்க்க போட்டி நிகழ்ச்சிகள் கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷேஹ் இஹ்ஸானுதீன் அபுல் ஹஸன் நளீமி தலைமையில் நடைபெறும் இவ்விழாவின் பரிசளிப்பு விழாவில் நாட்டின் முக்கியஸ்தர்கள் கலீபாக்கல், உலமாக்கல், மத்ரஸாவின் உஸ்தாத்மார்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்விழாவில்
சீனன் கோட்டையின் இரு கண்கல் என வர்ணிக்கப்படும் அல்ஹுமைஸரா தேசிய பாடசாலை, நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆகிய பாசாலைகளிலும், சீனன் கோட்டை மாணவ, மாணவிகக் வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் திரமை சித்தி பெற்றவர்களும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவில் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(பேருவலை – பீ.எம். முக்தார்)