தொட்டவத்தையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவிகள்
பாணந்துறை தொட்டவத்தையிலிருந்து முதல் தடவையாக பாத்திமா நூரா உள்ளிட்ட இரண்டு மாணவிகள் அரச பல்கலைக்கழக வைத்தியபீடம் தெரிவாகி கிராமத்தின் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாசாலையில் ஆரம்ப கல்வியை தொடங்கிய கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி நூரா மற்றும் அல்பஹ்ரியா மாணவி எம்.எப்,பாத்திமா ரிம்ஸா ஆகிய மாணவிகள் அரச வைத்தியபீடம் தெரிவாகிய முதலிரண்டு தொட்டவத்தை கிராமத்தின்
மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாத்திமா நூரா தொட்டவத்தையைச் சேர்ந்த நபீல் அஹமத் ஆசிரியை ரியாஸா நபீலின் சிரேஷ்ட புதல்வியாவார். பாத்திமா ரிம்ஸா முஹம்மத் பர்ஸான் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.
இவர்கள் வெற்றிகரமாக வைத்திய கல்வி நிறைவுசெய்து தேசத்துக்கும் சமூகத்துக்கும் சிறந்த பணியாற்ற இறைவன் அருள்புரிய வேண்டுமென கிராம மக்களும் கல்வி ஆர்வலர்களும் வாழ்த்துகின்றனர்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியிலிருந்து பாத்திமா நூரா உள்ளிட்ட ஏழு மாணவிகள் வைத்தியபீடம் தெரிவாகியுள்ளனர்.
1 . இஸ்மத் நஸீர் சாரா மர்யம்-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
2 . எம்.எச்.யூ.பாத்திமா கதீஜா-மொரடுவ பல்கலைக்கழகம்
3 . முஹம்மது நியாஸ் தஸ்பீஹா-ருஹுணு பல்கலைக்கழகம்
4 . எம்.என்.பாத்திமா நுஸ்ரா-ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
5 . எம்.எஸ்.பாத்திமா ஹஸ்னா-ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
6 . ஸீனதுல் நிஸ்ரா இக்ராம்-கொழும்பு பல்கலைக்கழகம்
7 . எம்.என்,பாத்திமா நூரா- வயம்ப பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகியுள்ளனர்.
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியிலிருந்து கடந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இருநூற்றி பத்தொன்பது மாணவிகள் பல்கலைக்கழக பல்வேறு கற்கை நெறிகளுக்கு தகைமை பெற்றுள்ளதுடன் இதில் அறுபது பேர் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பல்வேறு பிரிவுகளுக்கும் தகைமை பெற்றுள்ளனர்.
மேலும், கொழும்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த இல்மா சர்வதேச பெண்கள் பாடசாலையிலிருந்து பாத்திமா மிஸ்ரா தவ்பீக் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியபீடத்துக்கு தெரிவாகியுள்ளார். இந்த மாணவி கொழும்பு மாவட்டத்தில் 74ஆம் நிலையும் அகில இலங்கை ரீதியில் 271ஆம் நிலையும் பெற்றுள்ளார்.
பணந்துறை அல்பஹ்ரியா மாணவி எம்.எப்.பாத்திமா ரிம்ஸா மொரடுவ பல்கலைக்கழக வைத்தியபீடம் தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாண வைத்திய பீடம் தெரிவாகியுள்ள முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி சாரா மர்யமும் அல்பஹ்ரியாவில் ஆரம்ப கல்வியை தொடங்கிய மாணவியாவார்.
இலங்கை வயம்ப பல்கலைக்கழக வைத்தியபீடத்துக்கு நூற்றி நாற்பத்தொன்பது மருத்துவ மாணவர்கள் தெரிவாகியுள்ளதுடன் இதில் இருபத்தொரு முஸ்லிம் மாணவர்கள் உள்ளடங்கியுள்ளனர். வயம்ப பல்கலைக்கழகம் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டியவில் அமைந்துள்ளதுடன் வைத்தியபீட மாணவர்களுக்கான பேராசிரியர் பிரிவு (Professor Unit) குருநாகல் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ளது.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)