கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று
கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று (11 ஒக்டோபர் 2025) நடைபெறவுள்ளது.
கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
மூதூர் ஜே. எம். ஐ பப்லிகேஷனினால் வெளியிடப்படுகின்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் எம் எம் முஹம்மத் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
அஷ். யூ.கே. ரமீஸ் விஷேட உரை நிகழ்த்துவார். நூல் விமர்சனத்தினை தினகரன் ஆசிரியர் பீடத்தின் முன்னாள் ஆலோசகரும் கம்பஹா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்ஏஎம் நிலாம் நூல் விமர்சனத்தினையும் ஊடகவியலாளர் நாச்சியாதீவு பர்வீன் நூல் நயவுரையையும் நிகழ்த்தவுள்ளனர்.