பெரியமுல்லை அஹதியா பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா
கம்பஹ மாவட்ட நீர்கொழும்பு பெரிய முல்லை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
விழாவின் பிரதம அதிதியாக சமய நல்லிணக்க பிரதியமைச்சர் அஷ்ஷேக் முனீர் முளப்பர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
விஷேட அதிதியாக
அல்ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் எம். எஸ். எம். ஸஹீர் கலந்து கொண்டார்.
அஹதியா நிருவாகக் குழுவின் தலைவர் அப்துல் ஹலீம் ,அதிபர் மௌலவி ஸப்ரி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களும் படங்களில் காணப்படுகின்றனர்.
இந்த வருடாந்த பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பெரிய முல்லை அஹதியா சமய பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள் குழாமும் நிருவாக உறுப்பினர்களும் மேற்கொண்டனர்.




(எம்.ஜே.எம் தாஜுதீன்)