அமைதிப் பேச்சு வெற்றி; யுத்த நிறுத்தம் இன்று முதல் அமுல்
பாலஸ்தீனத்தில் யுத்த நிறுத்தம் உறுதியானது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் மற்றும் பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பினருக்கு இடையிலான முதல்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 72 மணி நேரங்களுக்கு பின் பாலஸ்தீன விடுதலை அமைப்பினரிடம் இருக்கும் இஸ்ரேலிய உயிருள்ள பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.
அதே வேலை இரு தரப்பும் ஒப்புக்கொண்ட படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லை வரை முதல் கட்டமாக பின்வாங்கும்.
ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் மத்திய கிழக்குக்கு வருவதாக அறிவித்துள்ளார்.