ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி – 2025

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி பாஸியா மண்டபத்தில் சட்டத்தரணி அல்ஹாஜ் எம். சீ. எம் ஹம்ஸாவின் வழிகாட்டலில் கலாபீட அதிபர் மெளலவி அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நடைபெற்றது.
கலாபீட பணிப்பாளர் மெளலவி எம் ஜே எம் பஸ்லான் ( அஷ்ரபி -பீ ஏ) கலந்து சிறப்பத்ததோடு மாணவர்களுடைய ஒழுக்கம் பண்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தினார்.
இங்கு உரையாற்றிய கலாபீட அதிபர் மெளலவி அஸ்மிகான் ( முஅய்யிதி) கூறியதாவது:
மார்க்க கல்வி கற்பதற்காக தம் பிள்ளைகளை அனுப்பியிருக்கும் பெற்றோர்களுக்கு நாளை மறுமையில் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றி கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது: யார் அல்குர்ஆனை கற்று அதன் படி நடக்கிறாரோ அவரின் பெற்றோருக்கு மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படும். அதன் ஒளி சூரியனை விட பிரகாசமாக இருக்கும். அப்பெற்றோருக்கு ஒரு சோடி ஆடை அணிவிக்கப்படும். அதன் பொறுமதிக்கு உலகமே ஈடாகாது. ஏன் எமக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது எனக் கேட்கும் போது உங்களது பிள்ளை குர்ஆனை கற்றதுக்குத்தான் எனச் சொல்லப்படும்.
இதில் கலந்து சிறப்பித்த கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) உரையாற்றுகையில் இன்று பல கல்வி நலையங்களில் மார்க்க அறிவு போதிக்கப்படுகிறது. ஆனால் எமது இந்த கலாபீடத்தில் போதிக்கப்படும் அறிவு சிறப்புவாய்ந்தது. ஏனெனில் இது இறைநேசர்களுடைய உதவியுடன் கல்வி போதிக்கப்படுவதாகும் என்றார்.
கலாபீட இணைச் செயலாளராகளான அல்ஹாஜ் முஸ்னி உவைஸ், ஜனாப் றமளான் அரூஸ், நிர்வாக சபை உறுப்பினர்களான அல் ஹாஜ் பீ.எம் முக்தார், அல்ஹாஜ் அல்ஹாபில் இஷ்பாக், ஹழரா ஜமாத் உறுப்பினர்கள், கலாபீட பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதில் மாணவர்கள் ஆங்கிலம், தமிழ், அறபு மொழிகளில் உரையாற்றி திறமைகளை வெளிப்படுத்தியதோடு கிராத், இனிய கஸீதாக்களும் அரங்கேற்றப்பட்டு மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.




(பேருவலை பீ . எம் முக்தார்)