ஓட்டமாவடி அமீன் ஆசிரியர், வபாத்தான தனது தாயாரின் ஞாபகார்த்தமாக 57 மாணவர்களை கௌரவிப்பு செய்தார்

ஓட்டமாவடி சகீனத் பவுண்டேசன் ஏற்பாடு செய்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு புதன்கிழமை (8) இடம்பெற்றது.
சகீனத் பவுண்டேசன் ஸ்தாபகரும் அலிப் கல்வி நிலையத்தின் பொறுப்பாசிரியருமான எம்.எல்.எம்.அமீன் தலைமையில் இந்நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில், அலிப் கல்வி நிலையத்தில் பிரத்தியேக வகுப்பில் இணைந்து கல்வி கற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் பாராட்டி நினைவுப் பதக்கம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்களான எம்.பி.டி.கான், எம்.பி.நபீர், எம்.பி.எம்.சித்தீக், எச்.எம்.ஆதம் லெப்பை, எஸ்.எம்.கடாபி (சிறாஜி) மற்றும் ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலய அதிபர் ஏ.எம்.ஜாபிர் கரீம், கல்குடா ஜம்இய்யது உலமா செயலாளரும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை உதவி அதிபருமான் ஏ.எம்.இஸ்ஸத் (நஹ்ஜி) உட்பட நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மரணமடைந்த தனது தாயாரின் ஞாபகார்த்தமாக ஆசிரியர் எம்.எல்.எம்.அமீன் புலமைப் பரிசில் மாணவர்களை தனது சொந்த நிதியிலிருந்து வருடாவருடம் பாராட்டி கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



(எச்.எம்.எம்.பர்ஸான்)