உள்நாடு

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 37 வயதான சந்தேக நபரிடம் விசாரணை

அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதன்கிழமை(8) இரவு தரவைப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கடற்கரை பள்ளி வீதியில் வைத்து கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஐஸ் 1 மில்லி 50 மில்லி கிராம் குறித்த 37 வயது சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டதுடன் கைதானவர் நீண்ட காலமாக போதைப்பொருளை பழ விற்பனையாளர் போன்று விற்பனை செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.சமந்த டி சில்வா பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி ரத்னவீர அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு வலய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என் குலதுங்கவின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகே தலைமையிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(பாறுக் ஷிஹான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *