பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய கணக்காளராக பாத்திமா சபானா
பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவிலைச் சேர்ந்த செல்வி.எஸ். பாத்திமா சபானா தனது கடமைகளை 2025.10.07 ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் , உத்தியோகத்தர்கள் மற்றும் கணக்காளரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக நிர்வாக இளங்கலை பட்டதாரியான செல்வி.எஸ். பாத்திமா சபானா இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து ஒலுவிலின் முதல் பெண் கணக்காளர் என்ற பெருமையையும் தனதாக்கி கொண்டார்.
ஜனாப். ஐ.எல். சகாப்தீன் திருமதி. எம்.ஐ. ஜாரியா தம்பதிகளின் ஏக புதல்வியானஇவர் நிர்வாக சேவையில் தனது முதலாவது நியமனத்தினை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


(இஸட்.ஏ.றஹ்மான்
ஒலுவில் விசேட செய்தியாளர்)