உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வீடு கையளிப்பு
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ‘சமட்ட நிவகன’ சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை என்ற தேசிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்பட்ட வீடு நேற்று (06.10.2025) திங்கள் கிழமை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.சுபாஸ்கர், வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எல்.நளீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பத்து இலட்சம் ரூபா நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு பயனாளியின் பங்களிப்புடன் வீடுகள் மாவட்டத்தில் அமையப்பெறுவதாக வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.சுபாஸ்கர் தெரிவித்தார்.





(எஸ்.எம்.எம்.முர்ஷித்)