சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி உக்குவலை அஹதிய்யாவில் நிகழ்வுகள்
சர்வதேச சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு உக்குவளை அஹதிய்யா(அறநெறி) பாடசாலை மாணவ மாணவியர்கள் பங்குபற்றும் விசேட நிகழ்சிகளும் அவர்களுக்கான பரிசளிப்பு அதனையடுத்து சின்னம் அணிவிக்கும் நிகழ்வுகளும் எதிர்வரும் 12 ந்திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு உக்குவளை அஜ்மீர் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.
இப்பாடசாலை அதிபரும் அஜ்மீர் பாடசாலை முன்னாள் பிரதி அதிபருமான அல்ஹாஜ் எம்.எஸ். ஹலீம்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அஹதிய்யா நலன்விரும்பிகளுடன் பெற்றோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இப்பாடசாலை தலைமையாசிரியர் திருமதி பர்ஹானா மற்றும் ஆசிரியை திருமதி சர்மிலா ஆகியோரது ஏற்பாட்டில் ஏனைய ஆசிரிய ஆசிரியர்களது ஒத்துழைப்புகளுடன் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களில் அஹதிய்யா பாடசாலைகளை இயங்காதிருந்துவரும் நிலையில் உக்குவளை அஹதிய்யா அதன் அதிபரின் வழிகாட்டுதலின் சக ஆசிரியை ஆசிரியர்களது விடா முயற்சியில் இப் படசாலை சிறப்பாக இயங்கிவருவதுடன் அரச பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இடை நிலைப் பரீட்சை ஆண்டிறுதிப் பரீட்சை மற்றும் தர்மாச்சாரிய ஆகிய பரீட்சைகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் சிறப்பு சித்திபெற்று அவர்களுக்கான கெளரவிப்புகளும் நடாத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
(உக்குவளை நிருபர்)