மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறும் 3 விஞ்ஞானிகள்
இந்தாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று(6) முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கும் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானியொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோருக்கு மருத்துவத்துக்கானநோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக நோபல் பரிசு குழுவினர் அறிவித்துள்ளனர்.