சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்குரிய நெற்காணிகள் குத்தகைக்கு வழங்கும் நிகழ்வு
சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்குரிய நெற்காணிளை குத்தகைக்கு வழங்கும் நிகழ்வு நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களின் தலைமையில் பள்ளிவாசலில் நடைபெற்றது.
மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் விவசாயிகள் நியாயமான முறையில் மிகவும் கண்ணியமாகவும் நீதமாகவும் நடந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட விவசாயிகள், நம்பிக்கையாளர் சபையின் காணி கூறலுக்கான குழுவினர், கௌரவ உறுப்பினர்கள், காணிகள் சம்பந்தமான விளக்கம் வழங்கிய ஏ.எம். றஸீட், காணி கூறுதலுக்கு உதவிய சஹாப்தீன், பள்ளிவாசல் நிதியில் அல்லாமல் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது சொந்த நிதியிலிருந்து சகலருக்கும் தேநீர் உபசாரம் வழங்கிக் கௌரவித்த தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் மற்றும் பள்ளிவாசல் ஊழியர்கள் ஆகியோருக்கு செயலாளர் எஸார் மீராசாஹிப் நன்றி தெரிவித்தார்.




(எம்.எஸ்.எம்.ஸாகிர்)