கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாலியபுர அணி சம்பியன்
அசறிக்கம சிரேஷ்ட விளையாட்டு வீரர்களினால் முதன் முதலாக நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சாலியபுர அணி சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது.
அசறிக்கம முஸ்லிம் வித்தியால விளையாட்டு மைதானத்தில் (05) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாலியபுர அணி அழுத்தகம அணியை வீழ்த்தியது.
இந்த தொடரில் 14 அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராக மதுசங்கவும் சிறந்த துடுப்பாட்ட வீரராக அழுத்தம் அணியின் றிழ்வான் தெரிவு செய்யப்பட்டார்.
சம்பியன் கிண்ணத்தை மத்திய நுவரகம் பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன் முசாதிக் வழங்கி வைத்தார்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)