உள்நாடு

எங்கள் வாழ்வை செதுக்கிய சிற்பிகளே,எதிர்காலத்தின் வழிகாட்டிகளே; ஹிஸ்புல்லாஹ் எம்.பி இன் ஆசிரியர் தின வாழ்த்து

எமது தேசத்தின் முதுகெலும்பாகவும், அறிவுச் சமூகத்தின் ஆணிவேராகவும் விளங்கி, எங்களுக்கு அறிவையும், நம்பிக்கையையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் என் உள்ளம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் கல்வித் தரத்தை சார்ந்தே உள்ளது. எமது மாணவர்களுக்கு வெறும் புத்தகக் கல்வியை மட்டுமன்று, நன்னடத்தை, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, அன்பு மற்றும் தேசப்பற்று ஆகிய உன்னத பண்புகளையும் போதித்து, அவர்களை உலகறியும் தலைவர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு என்றும் மகத்தானது.

தங்கள் வாழ்க்கை முழுவதும் அறிவொளியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்ட ஆசிரியர்களின் பணி ஈடு இணையற்றது. இவர்களின் உன்னத தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் இந்நாளில் நாம் மனதாரப் போற்றுகிறோம்.

எமது ஆசிரியர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் தங்கள் புனிதப் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

— கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
பிரதித் தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *