கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலைய தண்டவாலத்திற்கு கொங்கிறீட் கட்டைகள்
கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையத்தில் உள்ள பழைய மரத்திலான புகையிரத தண்டவாள சிலிப்பர் கட்டைகள் அகற்றப்பட்டு, கொங்கிறீட் கட்டைகள் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளீன் ஶ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் இடம்பெறும் நவீனமயமாக்கல் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, இப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
புகையிரத சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஏனைய புகையிரத மேடைகளை பயன்படுத்தியவாறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.