கொறகான ஹைப்ரோவில் சிறுவர் தின நிகழ்வுகள்
பாணந்துறை கொறகான ஹைப்றோ சர்வதேச பாடசாலை பாலர் பிரிவின் (Highbrow Montessori) சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இந்த சிறுவர் தின நிகழ்வில் இணைந்துகொண்ட மில்லா முபீத், இபா மர்யம் சமீர், எப்.நுஹா உள்ளிட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள பல்லினம் சார்ந்த சிறார்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

