தப்போவ குளத்தை யானைகளுக்காக ஒதுக்குவதற்கு துரித திட்டம் குறித்த ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு
சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயன்முறையின் ஒரு துரித திட்டமாக, இந்த மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ தப்போவ குளத்தை மையமாகக் கொண்டு திட்டமொன்றை மேற்கொள்ள சுற்றாடல் அமைச்சு மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இத்திட்டத்தின் பிரதான உத்தேச துறைகளாக:
ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுவதன் மூலம் வனவிலங்குகளான யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்துதல்
வனவிலங்கு சரணாலயங்களுக்குள் தரங்குறைந்த நீர்த்தேக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல்
குறிப்பாக கிராமியக் குழுக்கள் ஊடாக பிரதேச செயலாளர் மூலம் பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்புடன் சமூகப் பங்கேற்பு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துதல், மற்றும் தற்போதைய மின்வேலிகளைப் புனரமைத்தல் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டு, இந்தத் திட்டங்களைச் செயற்படுத்துவதன் மூலம் யானைகளுக்குச் சாதகமான சுற்றுச்சூழல் அமைப்பை வளப்படுத்தி உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துரித திட்டமானது, சுற்றாடல் அமைச்சின் தலைமையில், அதனுடன் இணைந்த நிறுவனங்கள், ஜனாதிபதி செயலகம் மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டம் இணைந்து, முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கு இணையாக, வனாத்தவில்லுவ எளாரிஸ்வெவ (Elaris Wewa) மற்றும் அனாத்தவெவ (Anathawewa) ஆகியவற்றை புனரமைத்தல், கல்வல பூங்காவில் உள்ள களப்பு அந்தர (Kallappu Andara) எனும் ஆக்கிரமிப்புத் தாவரத்தை அகற்றுதல், கருவலகஸ்வெவ மின்வேலியின் இருபுறமும் உள்ள காட்டுப் பகுதியை அகற்றுதல் மற்றும் வனாத்தவில்லுவ மின்வேலிக்கு அருகில் உள்ள பாதையைச் சீரமைத்தல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள இத்திட்டத்திற்குச் சூழலியலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகள் மற்றும் சூழலியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்தும் நோக்குடன், இலங்கையில் அதிக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நிலவும் பிரதேசங்களை இலக்கு வைத்து முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்திட்டம், அநுராதபுரம், குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களை மையமாகக் கொண்டு யானைகளுக்கு உகந்த சூழலை உருவாக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள.
இன் நிகழ்வு மாவட்ட செயலாளர் வை.ஐ.எம் சில்வா தலைமையில் இடம்பெற்றது.



(ஏ.என்.எம். முஸ்பிக்)