38ஆவது படைப்பிரிவின்புதிய கட்டளை அதிகாரியாகவரலாற்றில் இடம்பிடித்த மேஜர் தமீம்
மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.தமீம் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க அவர்களின் பணிப்புரைக்கமைய லெப்டினன்ட் கேர்னல் பி.அருண சாந்த முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள 38வது மாணவர் படையணி காரியாலயத்தில் தனது கடமையினை (08) திங்கட்கிழமை பொறுப்பேற்ற அவர், வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறித்த இப்பதவிக்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.
இந்த சிறப்பான நிகழ்வில் 17வது படைப்பிரிவின் கட்டளையதிகாரி லெப்டினன்ட் கெர்னல் அருனசார்ந்த அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 38வது படைப்பிரிவின் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
சிறப்பித்தனர்.
புதிய கட்டளையதிகாரியாக பொறுப்பேற்ற மேஜர் தமீம் உறையாற்றும் போது, மாணவர்களின் ஒழுக்கம், கல்வி மற்றும் நாட்டுப்பற்று போன்ற வளர்ச்சிக்காக தனது முழு திறனையும் அர்ப்பணிப்பதாகவும், படைப்பிரிவின் முன்னேற்றத்திற்காக எப்போதும் பாடுபடுவதாகவும் உறுதியளித்தார்.
இந்த பொறுப்பேற்பு நிகழ்வு அனைவருக்கும் உற்சாகத்தையும், தேசிய மாணவச்சிப்பாய்கள் படையனியின் சிறப்பையும் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




(யூ.கே. காலித்தீன்)