உள்நாடு

பேருவளையில் சிறப்பாக நடைபெற்ற நூல் வெளியீடு மற்றும் ஸீரா மாநாடு

பேருவளை சீனன் கோட்டை (kanowladge forum) மனாரத் மகளிர் அமைப்பு இனைந்து ஏற்பாடு செய்த இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை சரிதையை விளக்கும் ஸீரா மாநாடு மற்றும் பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் கலாநிதி அரபாத் கரீம் (நளீமி) அவர்களினால் எழுதப்பட்ட அல் குர்ஆனிய வாழ்வைச் சுமந்த இறைதூதர் முஹம்மத் (ஸல்) என்ற நூல் வெளியீட்டு வைபவம் பேருவளை சிமிச் (zimich) மண்டபத்தில் 3ஆம் திகதி மாலை சிறப்பாக நடைபெற்றது.

சீனன் கோட்டை பள்ளிச்சங்கத் தலைவரும் ஜாமியா நளீமியா கலாபீட நிர்வாக சபை உப தலைவருமான ஏ.எச்.எம்.முக்தார் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி தாவூத் அப்துல் மலிக் யஹ்யா அல் ஹிதாபி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சீனன் கோட்டை பாஸியா பெரிய பள்ளிவாசல் இமாம் மௌலவி எம்.என்.எம்.மிஸ்பாஹ் (பாஸி)யின் கிராத்துடன் ஆரம்பமான இன் நிகழ்வில் விழா சீனன் கோட்டை (chaina fort knowledge forum) தலைவர் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அஷ்-ஷேய்க் மக்கி மன்சூர் (நளீமி) வரவேற்புரை நிகழ்த்தினார்.

கண்டி வடதெனிய கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் எம்.நவாஸ் ஸநூர் தீன் (எம்.ஏ) நூல் விமர்சனம் செய்தார்.

அகில இலங்கை ஜெம்மியத்துல் உலமா சபையின் பொருளாளர் கலாநிதி அல்-ஹாஜ் ஏ.அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) முஸ்லிமல்லாத ஆய்வாளர்கிளின் பார்வையில் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் என்ற தலைப்பிலும் கொழும்பு மிஷ்காத் ஆராய்ச்சி நிறுவன பனிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் மாற்றுமத சகோதர்களுடன் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

பிரதம அதிதியான பேராசிரியர் கலாநிதி தாவூத் அப்துல் மலிக் யஹ்யா அல் ஹிதாபி முக்கிய உரை நிகழ்த்தினார்.

கலாநிதி அஷ்-ஷேய்க் அரபாத் கரீம் (நளீமி) அல் குர்ஆனிய வாழ்வைச் சுமந்த இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) சென்ற நூலை சிறப்பாக எழுதியுள்ளதை பாராட்டி பேசினார் அத்தோடு இலங்கையில் இவ்வாறான ஸீரா மாநாட்டில் பங்கு பெற்றக் கிடைத்தமையையிட்டு பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

கலாநிதி அரபாத் கரீம் (நளீமி) பிரதம அதிதியான பேராசிரியர் கலாநிதி தாவூத் அப்துல் மலிக்கிடம் நூலின் பிரதியை வழங்கி வெளியீட்டு வைத்தார்.

விழாவிற்கு முன்னதாக பெண்களுக்கான விஷேட சொற்பொழிவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.பெண் ஆளுமை உருக்கத்தில் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) என்ற தலைப்பில் அஷ்-ஷேய்க் எம்.ஏ.அனஸ் முஹம்மத் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது.

சீனன் கோட்டை மனாரத் மகளிர் அமைப்பின் தலைவி நஸீலா மஷூர் மில்ஹான் உட்பட அதன் உறுப்பினர்கள் (china fort knowledge forum) உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ரவூப் ஹகீம், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராச்சி, பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், பேருவளை பிரதேச சபை தலைவர் பைஸான் நைஸர், முன்னால் பரலுமன்ற உறுப்பினர்கலான எம்.எஸ்.எம். அஸ்லம் ஹாஜியார், அல்ஹாஜ் மர்ஜான் பலீல்,மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான இப்திகார் ஜெமீல்,எம்.எம்.அம்ஜாத், பேருவளை நகர சபை எதிர்கட்சித் தலைவர் அஸாம் பளீல் உட்பட நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஜாமிஆ நமீபியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர்களான அஷ்-சைய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி),அஷ்-ஷேக் ஸீ.அய்யூப் அலி (நளீமி) உட்பட கலாபீட விரிவுரையாளர்கள், அல்-ஹாஜ் காமில் நளீம் உட்பட ஜாமிஆ நமீபியா கலாபீட நிர்வாகிகள்,கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவிகள் எம்.ஐ.எம்.ரபீக் (பஹ்ஜி),எம்.எஸ்.எம்
பைரூஸ் (பஹ்ஜி),எம்.ஐ.எம்.பாரூக் (மக்கி) உட்பட உலமாக்கல்,புத்திஜீவிகள்,சீனன் கோட்டை பள்ளிச் சங்க இனைச் செயலாளர் எம்.எம்.எம்.சிஹாப் ஹாஜியார் உட்பட உறுப்பினர்கள்,மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாகிகலாண அதாவுல்லா அபூபக்கர்,ஜாபிர் முஹம்மட் உட்பட சமூக நல இயக்கங்களின் பிரதி நிதிகள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பெருமலவிளானோர் கலந்து கொண்டனர். அல்-ஹாஜ் அக்பர் காஷிம் நன்றியுரை நிகழ்த்தினார்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *