சுற்றுலாத் தளமான கற்பிட்டி கள விஜயம் மேற்கொண்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள்
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் பீடத்தில் கல்வி கற்கும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுவொன்று, தமது ஆராய்ச்சி ஆய்வை நிறைவு செய்யும் நோக்குடன், கற்பிட்டி பிரதேசத்தில் நிலவும் சுற்றுலாத் துறை குறித்து ஆராய்வதற்காக வெள்ளிக்கிழமை (03) கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இம் மாணவர்களை வரவேற்பதற்காகவும், கற்பிட்டி பிரதேசத்தின் சுற்றுலா நிலைமை பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும் ஒரு நிகழ்ச்சித்திட்டம் வெள்ளிக்கிழமை கண்டக்குளி குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெபிட்டல் வின்ட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது
கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி தமரா ஜயசுந்தர மற்றும் கலாநிதி தர்ஷன அசோக்க குமார, சுமார் a70 மாண மாணவிகளும், கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக கிராம உத்தியோகத்தர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கள விஜயம் மாணவர்களுக்கு அவர்களது ஆராய்ச்சிக்குத் தேவையான நடைமுறை அறிவு மற்றும் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையின் உண்மையான நிலைமை பற்றிய சிறந்த புரிதலைப் பெற்றுக்கொள்ள உதவியமை குறிப்பிடத்தக்கது.






(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)