பாடசாலையின் வளர்ச்சியில் ஒருமித்த ஒத்துழைப்பு மிக அவசியம்..! -அல் பஹ்ரியா அதிபர் எஸ்.எல்.எம்.பிர்தவ்ஸ்
எதிர்கால சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பிரதேச பாடசாலைகளுக்கு பாரிய பொறுப்பு இருப்பதுடன் பாடசாலைகளில் வழங்கப்படாத ஒன்றை வேறு எங்கும் வழங்க முடியாது.
பிரதேச பாடசாலையொன்றின் வளர்ச்சியில் அனைவர்களினதும் ஒருமித்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும் என பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலையின் புதிய அதிபர் எஸ்.எல்.எம்.பிர்தவ்ஸ் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ள இலங்கை அதிபர் சேவையின் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.எல்.எம்.பிர்தவ்ஸ் (SLPS 2)நியமனம் பெற்றுள்ளார்.அண்மையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும்போதே புதிய அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமூகமொன்றின் வளர்ச்சியில் சிறந்த ஒழுக்க விழுமியங்கள் மிகவும் முக்கியமானதாகும்.அடுத்த இந்தாண்டு காலத்தில் இந்த கிராமத்தின் சிறந்த எதிர்கால புத்திஜீவிகளை உருவாக்கும் ஒரு முன்னணி கல்விக்கூடமாக அல்பஹ்ரியா பிரகாசிக்க வேண்டும்.இதற்காக அனைவரும் ஐக்கியத்துடன் ஒத்துழைத்து பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் முன்னாள் தலைவருமான இபாஸ் நபுஹான், தேசிய மக்கள் சக்தி தொட்டவத்தை கிளை தலைவர் எம்.என்.எம்.நஸார் ஹாஜி, தொட்டவத்தை பள்ளிவாசல்கள் பரிபாலன சங்க செயலாளர் சில்மி சஹீல், உறுப்பினர்களான நுஸ்ரி தாஹிர், எம்.எம்.எம்.அக்ரம், ரிப்தி கனி,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எஸ்.எம்.சப்ரி மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர். பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் தலைமையில் ஊர் சந்தியிலிருந்து புதிய அதிபருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.மெளலவி ஏ.எச்.எம்.சலீம் துஆப்பிரார்த்தனை நடத்தினார்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)



