புத்தளம் ஆனமடுவ பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு..!
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் சுமார் ரூ.160 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தலைமையில் புதன்கிழமை (01) திறந்துவைக்கப்பட்டது.
35 கிராம சேவையாளர் பிரிவுகளையும் 140 கிராமங்களையும் உள்ளடக்கிய ஆனமடுவ பிரதேச செயலகப் பிரிவில் 14,763 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 44,483 மக்கள் வசிக்கின்றனர், இந்தப் புதிய பிரதேச செயலக அலுவலக வளாகம் திறக்கப்பட்டதன் மூலம், இம் மக்களுக்கு தேவையான சேவைகளை எளிதாக அணுக முடியும் என கட்டிடத்தை திறந்து வைத்த உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவான் செனரத், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜனக மற்றும் முகமது பைசல், ஆனமடுவ பிரதேச சபை உறுப்பினர்கள், பொது நிர்வாக அமைச்சின் கூடுதல் செயலாளர்கள், புத்தளம் மாவட்ட செயலாளர், ஆனமடுவ பிரதேச செயலாளர் மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

