ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி
சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் 05/10/ 2025 அன்று மாலை 4:00 மணிக்கு பாஸியா மண்டபத்தில் சட்டத்தரணி அல்ஹாஜ் M.C.M ஹம்ஸா தலைமையில் நடைபெறவுள்ளது.
கலாபீட அதிபர் மெளலவி அஸ்மிகான் ( முஅய்யிதி) யின் நெறிப்படுத்தலில் நடைபெறும் இந்நிகழ்வில் கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), கலாபீட பணிப்பாளர் மெளலவி எம் ஜே எம் பஸ்லான் ( அஷ்ரபி -பீ ஏ), கலாபீட நிர்வாக சபை உறுப்பினர்கள், ஹழரா ஜமாத் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருப்பது சிறப்பம்சமாகும்.


(பேருவலை பீ . எம் முக்தார்)