காஸா மக்களுக்கு உணவு மற்றும் மருந்துக்களை கொண்டு சென்ற 13 கப்பல்களை கைப்பற்றியது இஸ்ரேல்
காஸா அப்பாவிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற ப்ரீடம் புலோட்டிலா என்ற சர்வதேச கப்பல் கூட்டணியின் 13 கப்பல்களை இஸ்ரேல் இன்று கைப்பற்றியுள்ளதுடன் 200 செயல்பாட்டாளர்களையும் கைது செய்துள்ளது.
இன்னும் 27 க்கும் அதிகமான கப்பல்கள் காஸாவை நோக்கி பயணப்படும் நிலையில் அவற்றையும் கைப்பற்றுவதாகவும் அதிலுள்ளவர்களை கைது செய்யவுள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதில் பிரதான செயல்பாட்டாளரான 22 வயதுடைய கிரேட்டா தன்பர்க் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.