கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியாக லஷந்த களுவாராச்சி பதவியேற்பு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீர், பூகொட பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து நேற்று (29) பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராய்ச்சி கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக கடமையேற்றுக்கொண்டார்.
மேலும் கல்முனை பகுதியில் சமூக நலனுக்காக குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் போதை ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் புதிய பொறுப்பதிகாரி கேட்டுக்கொண்டார்.
(பாறுக் ஷிஹான்)