பேருவளை ஜாமிஆ நளீமிய்யா மாணவர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழா..!
சிங்கள மொழியைக் கற்றுக் கொள்வதானது அந்த மொழியின் தனித்துவமன சமூக கலாசாரத் தைப் புரிந்துகொள்ளவும், இனங்களுக்கு இடையேயான உறவுகளை வளர்க்கவும் உதவும் என்று தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீட மாணவர்களுக்கு சிங்கள மொழியில் பயிற்சி வழங்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள் சிங்கள மொழிப் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழா (2025/09/23) பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தில் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தலைமையில் நடைபெற்றது.
தொடக்க விழாவில் உரை யாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், மதத் தலைவர்களுக்கு இருமொழி தொடர்பாடலில் திறன் பயிற்சி அளிப்பது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த உதவும் என்றும், அஸ்கிரிய பிரிவேனாவின் மாணவ பிக்குகளுக்கு ஏற்கனவே தமிழ் மொழி பாடநெறி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில், அரச கரும மொழிகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் திலக் ஹெட்டியாரச்சி, ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் உஸ்தாத் அஷ் ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மத், கலாபீட கல்வித்துறை பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸீ. ஐயூப் அலி, இஸ்லாமிய கற்கைகள் துறை பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பளீல் உட்பட விரிவுரை யாளர்கள், சுமார் 50க்கும் மேற் பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.











