கரூர் களேபரம்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு..!
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 22 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் கண்டறியப்படவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், 111 பேர் சிகிச்சை பெற்று வரும்நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.