உள்நாடு

இரண்டாவது சுகாதார நல்வாய்வு மையம் இரத்தினபரியில் திறந்து வைப்பு..!

இந்த நாட்டில் வாழும் மக்கள் கண்ணியமான சுகாதாரசேவையை எளிதில் பெற்றுக்கொள்ளகூடியவகையில் உறுதிசெய்வதற்காக சுகாதாரக்கொள்கையின்தற்போதைய அரசாங்கத்தின் முதல் கட்டமாக சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டு தலின் கீழ், நாடு முழுவதும் ஆயிரம் ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ அமைச்சகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. மேலும் மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடத்தில் நிறுவப்படும் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள்” ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுமையம்” என்று பெயரிடப்பட்டுள்ளன. இது நாட்டின் சுகாதாரசேவையை நல்லவழியில் மாற்றி அமைக்கும் சிறந்த மாற்றத்தின் முதல் ஆரம்பமாக இது காணப்படுகிறது.
மேலும் புதிய அரசாங்கத்தின் சிறந்த திட்டமான “HEALTHY SRI LANKA” இன் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதார மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இரண்டாவது சுகாதார மற்றும் நல்வாழ்வு மையமான இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அத் ஓயா சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம், நேற்று (27) மதியம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
முதல் அங்கத்துவர் பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவு அட்டை அமைச்சரால் வழங்கப்பட்டது. சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தால் வழங்கப்படும் சேவைகள் குறித்து அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்த அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, நான்கு அல்லது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலான மக்களை உள்ளடக்கிய ஒரு சுகாதாரக் குழு அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த மக்கள் அந்த மையத்தால் உள்வாங்கபடுவார்கள் என்றும் பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இது ஒரு நல்வாழ்வு மையம் என்றும் தெரிவித்தார்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், மக்கள் மருத்துவமனை க்கு செல்வதற்கு முன்பே நோய்களை குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த மையம் உதவும் என்றும் அங்கு கூடியிருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதற்காக மாவட்ட மக்கள் பதிவு செய்யப்பட்டு தேவையான அடிப்படை பரிசோதனைகள் நடத்தப்படும், மேலும் இந்த மையத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ அதிகாரியின் எல்லைக்கு அப்பாற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு அருகிலுள்ள இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். இந்த மையம் இந்த திட்டத்தின் இரண்டாவது மையம் என்றும், நாட்டில் இதுபோன்ற ஆயிரம் சுகாதார மையங்கள் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் எட்டு பேர் கொண்ட சுகாதார ஊழியர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் மக்கள் தங்கள் உடல்நலத்தைப் பற்றி சிந்திக்காவிட்டாலும், இந்த ஊழியர்கள் மக்களின் அந்த ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
மற்றும் மற்றும் இந்த மையங்கள் மக்களுக்கு சுகாதார ஆலோசனை மருந்துகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் ஆயுர்வேத சுகாதார சேவைகளையும் படிப்படியாகத் தொடங்கும் என்றும், உடல் உடற்பயிற்சி, யோகா, இசை சிகிச்சை போன்றவற்றை உங்கள் வாழ்க்கையுடன் பழகுவதற்கான இடமாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.
இந்த சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் முத்துவ, அதோயா, முத்துவ கிழக்கு மற்றும் பஹல ஹகமுவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் கிட்டத்தட்ட ஐயாயிரம் மக்களுக்கு சேவைகளை வழங்கும்.

தொற்று அல்லாத நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகள் அடிப்படை அறுவைசிகிச்சை முதியோர் பராமரிப்பு, மறுவாழ்வு நோய்த்தடுப்புபராமரிப்பு, முதன்மை ஆரம்ப கண் பராமரிப்பு, வாய் சம்பந்தமான சுகாதார பராமரிப்பு, மனநலபராமரிப்பு மற்றும் ஆலோசனை சேவைகள், ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் ஆலோசனை சேவைகள், மது மறுவாழ்வு சேவைகள் மற்றும் ஆலோசனை இளைய தலைமுறைக்கான மருத்துவசேவைகள், ஆய்வக சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆரம்ப சுகாதாரசேவைகளை வழங்கும்.
ஒரு குடும்ப மருத்துவர், ஒரு சமூக சுகாதார செவிலியர் மற்றும் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்ட ஒரு சுகாதார குழு இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் இணைக்கப்பட உள்ளது. இந்த மையங்கள் மூலம் அந்த பிராந்தியங்களில் வாழும் மக்களுடன் தொடர்புடைய அவசரகால சூழ்நிலைகளிலும் இந்த மையங்கள் மூலம், அந்தப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுகாதாரப்பிரச்சினைகளைத்தீர்ப்பதே முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாந்த பத்மகுமார, வசந்த புஷ்பகுமார, சப்ரகமுவ மாகாண முதன்மைச் செயலாளர் கே.டி. ஏ. சுனிதா, சபரகமுவ மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சுஜீவ போதிமண்ண, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனோஜ் ரோட்ரிபாகோ, இரத்தினபுரி மாநகர சபை மேயர் இந்திரஜித் கட்டுகம்பள, நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தீப்திவிஜேதுங்க
சுகாதாரம்மற்றும்ஊடகத்துறை அமைச்சரின்ஊடகச்செயலாளர்
சுகாதாரமற்றும்வெகுஜனஊடகஅமைச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *