காதர் மஸ்தான் எம்.பீ.யுடன் இந்திய பிரதிநிதிகள் கலந்துரையாடல்..!
கொழும்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி குழுத் தலைவருமான கே. காதர் மஸ்தான் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தென்காசி மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது, சையது அபுதாஹிர் மிஸ்பாஹி ஆகியோர் 27.09.2025 சனிக்கிழமை மாலை மரியாதை சந்தித்து சால்வை அணிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் தமிழகம் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினார்கள்.
(படங்கள்: திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
