ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம். பைரூஸ் தெரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸும் புதிய செயலாளராக ஷம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (27) தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிருவாகக் தெரிவின் போது புதிய தலைவராக எம்.பி.எம். பைரூஸ் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தெரிவானார்.