நமது விமானப் பயண போக்குவரத்து பாதுகாப்பு உயர்ந்த நிலையில் உள்ளது; சஜித் பிரேமதாச
ஒரு நாடாக, நமது விமானப் பயணப் போக்குவரத்துப் பாதுகாப்புகள் உயர் மட்டத்தில் காணப்படுவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். Aviation security score இல் நமது நாட்டிற்கான மதிப்பெண் 92% ஆக அமைந்து காணப்படுவதோடு, இது நமது நாட்டில் விமானப் பயணப் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுத்தவரை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது உயர்மட்ட மதிப்பெண்ணாக அமைந்து காணப்படுகின்றன.
இருப்பினும், ஒரு நாடாக, விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேலும் மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தினார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் விமான நிலையம் தொடர்பாக கடந்த 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே, நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்துக் தேவையான பல யோசனைகளையும் அவர் இதன்போது முன்வைத்தார்.