விளையாட்டு

கஹட்டோவிட்ட கால்பந்து ப்ரீமியர் லீக்; சம்பியன் மகுடம் சூடியது மௌலானாபுரம் மவுண்டன்ஸ்

08வது கஹட்டோவிட்ட கால்பந்து ப்ரீமியர் லீக் (2025) போட்டிகள் KPL கால்பந்து கமிட்டியின் ஏற்பாட்டில் கடந்த 20 மற்றும் 21 ஆகிய தினங்களில் கஹட்டோவிட்ட பொது மைதானத்தில் இடம்பெற்றது.

35 வயதின் கீழ் மற்றும் 35 வயதுக்கு மேல் என இரு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டிகளில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் ஸஹ்ரான்‌ தலைமையிலான மாஸ்டர்ஸ் அணி 1 – 0 என்ற அடிப்படையில் சப்ராஸ் தலைமையிலான சீனியர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

மேலும், 35 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் மௌலானாபுர மவுன்டன்ஸ் அணி தொடர்ந்தும் மூன்றாவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டமை விஷேட அம்சமாகும்.

இறுதிப்போட்டியில் இம்முறை பைசல் தலைமையிலான மௌலானாபுர மவுன்டன்ஸ் அணியினர் 1 – 0 என்ற கோல் அடிப்படையில் நப்ராஸ் தலைமையிலான கமத்த கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

35 வயதுக்கு மேற்பட்டோருக்கான இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக மாஸ்டர்ஸ் அணியின் பைசர், 35 வயதின் கீழ் பிரிவில் இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக மௌலானாபுர மவுன்டன்ஸ் அணியின் சதான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறந்த கோல் காப்பாளர்களாக மாஸ்டர்ஸ் அணியின் ரிஸ்மி மற்றும் மௌலானாபுர மவுன்டன்ஸ் அணியின் ஹம்ஸா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிக கோல்களை அடித்தவர்களுக்கான விருதுகளை மாஸ்டர்ஸ் அணியின் சரபான் மற்றும் மௌலானாபுர மவுன்டன்ஸ் அணியின் ரிஸ்கி ஆகியோர் தமதாக்கிக்கொண்டனர்.

தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை கமத்த கிங்ஸ் அணியின் அகீல் சுவீகரித்துக் கொண்டார்.

மேலும் மேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்ற கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பாடசாலை அணியினரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

போட்டிகளுக்கு LOLC Al Falah மற்றும் Ridha Motors பிரதான அனுசரணை வழங்கினர்.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அத்தனகல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்திக்க சன்ஜீவ கலந்து சிறப்பித்தார்.

(ரிஹ்மி ஹக்கீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *